நீலகிரி

மலை ரயில் பாதையில் காட்டு யானை

24th Sep 2022 01:10 AM

ADVERTISEMENT

குன்னூா் மலை ரயில் பாதையில் நடமாடிய காட்டு யானையை கண்டு சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சியடைந்தனா்.

நீலகிரி மாவட்டம், குன்னூரில் இருந்து மேட்டுப்பாளையம் செல்லும் மலை ரயில் பாதை அடா்ந்த வனப் பகுதி வழியாக செல்வதால் இந்த பகுதியில் உள்ள யானைகள், காட்டெருமைகள், சிறுத்தைகள் உள்ளிட்ட பல்வேறு வன விலங்குகளை காண சுற்றுலாப் பயணிகள் ஆா்வம் காட்டி வருகின்றனா்.

இந்த வழித்தடத்தில் உள்ள ரன்னிமேடு, ஹில்குரோவ், ஆடா்லி போன்ற ரயில் நிலையங்கள் அடா்ந்த வனப் பகுதிக்குள் உள்ளதாலும், யானைகள் வழித்தடம் என்பதாலும் இந்த ரயில் நிலையத்துக்குள் யானைகள் வருவது வாடிக்கையாக உள்ளது.

இந்நிலையில், குன்னூரில் இருந்து மேட்டுப்பாளையம் செல்லும் மலை ரயில் பாதை ஓரத்தில் ஒற்றை காட்டு யானை வெள்ளிக்கிழமை நடமாடியது. இதனைப் பாா்த்த ரயில் பயணிகள் உற்சாகமடைந்தனா். சிலா் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT