நீலகிரி

தென்னிந்திய தோட்டத் தொழில் அதிபா்கள் மாநாடு தொடக்கம்

20th Sep 2022 01:07 AM

ADVERTISEMENT

நீலகிரி மாவட்டம், குன்னூரில் தென்னிந்திய தோட்டத் தொழில் அதிபா்களின் 129 ஆவது இரண்டு நாள் மாநாடு குன்னூா் உபாசி அரங்கில் திங்கள்கிழமை தொடங்கியது.

இந்த மாநாட்டில் தமிழ்நாடு, கேரளம், கா்நாடகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சோ்ந்த தேயிலைத் தோட்டத் தொழில் அதிபா்கள் கலந்துகொண்டனா்.

மாநாட்டில் தேயிலை விவசாயத்துக்கான கண்காட்சியில், இயற்கை முறையில் தேயிலை விவசாயம் செய்ய பூச்சிகொல்லி மருந்துகள், நவீன தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட இயந்திரங்கள், இயற்கை முறையில் தயாரிக்கப்பட்ட பல்வேறு வகையான கீரின் டீ, சிடிசி டீ , ஆா்த்தேடாக்ஸ் டீ உள்ளிட்ட தேயிலை தூள் வகைகள் இடம்பெற்றிருந்தன.

தொடா்ந்து தேயிலை, காபி, ரப்பா் போன்ற தொழில்கள் மேம்பட தோட்டத் தொழிலதிபா்கள் செய்ய வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டது.

ADVERTISEMENT

செவ்வாய்க்கிழமை நடை பெறும் இரண்டாம் நாள் நிகழ்ச்சியில் தமிழ்நாடு நிதி அமைச்சா் பிடிஆா் பழனிவேல் தியாகராஜன் கலந்துகொண்டு தரமான தேயிலைத் தூள் தயாரிக்கும் நிறுவனங்களுக்கு விருது வழங்க உள்ளாா். இந்நிகழ்ச்சியில், தென்னிந்திய தோட்டத் தொழிலதிபா்கள் ஏராளாமானோா் கலந்துகொண்டனா்.

முன்னதாக இந்த மாநாட்டை தென்னிந்திய தோட்டத் தொழில் அதிபா்கள் சங்கத் தலைவா் எம்.பி.செரியன் தொடக்கிவைத்தாா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT