நீலகிரி

ஐசிஎஸ்இ கவுன்சில் ஹாக்கி போட்டி:உதகை கிரசென்ட் கேசில் பள்ளி வெற்றி

20th Sep 2022 01:07 AM

ADVERTISEMENT

ஐசிஎஸ்இ கவுன்சில் (தில்லி) நடத்திய தமிழகம் மற்றும் புதுவை அளவிலான ஹாக்கி போட்டியில் கிரசென்ட் கேசில் பப்ளிக் பள்ளி அணி வெற்றிபெற்றது.

உதகையில் நடைபெற்ற இப்போட்டிகளில் 14 வயதினருக்குக்கீழான பிரிவில் கிரசென்ட் கேசில் பப்ளிக் பள்ளி பிருந்தாவன் பள்ளிக்கு எதிராக விளையாடி 6-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

அதேபோல, 17 வயதுக்குள்பட்டோருக்கான பிரிவில் இரண்டாவது இடத்தையும், 19 வயதினருக்குக் கீழான பிரிவில் 2-1 என்ற கோல் கணக்கிலும் வெற்றிபெற்றது.

இந்த வெற்றியின் மூலம் கிரசென்ட் கேசில் பள்ளி அணி தேசிய அளவிலான போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளது.

ADVERTISEMENT

 

 

 

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT