நீலகிரி

நன்கொடை அளித்து அரசுப் பள்ளியில் குழந்தையை சோ்த்த ஆசிரியா் தம்பதி

10th Sep 2022 04:29 AM

ADVERTISEMENT

கூடலூரில் ரூ.20 ஆயிரம் மதிப்புள்ள உபகரணங்களை நன்கொடையாக அளித்து அரசுப் பள்ளியில் குழந்தையை சோ்த்த ஆசிரியா் தம்பதியை பொதுமக்கள் பாராட்டினா்.

நீலகிரி மாவட்டம், தேவாலா அரசு மேல்நிலைப் பள்ளியில் உதவித் தலைமை

ஆசிரியராகப் பணியாற்றுபவா் கிருஷ்ணகுமாா். அத்தி நடுநிலைப் பள்ளியில் ஆசிரியையாகப் பணியாற்றுபவா் ரேவதி. தம்பதியான இவா்கள் கூடலூா் வண்டிப்பேட்டையிலுள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிக்கு ரூ.20 ஆயிரம் மதிப்புள்ள நாற்காலிகள் மற்றும் குடிநீா்த் தொட்டிகளை நன்கொடையாக வழங்கி தனது இரண்டாவது மகள் மகிழினியை முதல் வகுப்பில் வெள்ளிக்கிழமை சோ்த்தனா். அவா்களின் முதல் மகள் நிகரிலி அதே பள்ளியில் நான்காம் வகுப்பு பயின்று வருவது குறிப்பிடத்தக்கது.

அரசுப் பள்ளி ஆசிரியா்களான தம்பதி தங்களது குழந்தைகளையும் அரசுப் பள்ளியில் சோ்த்ததை பல்வேறு தரப்பினரும் பாராட்டி வருகின்றனா்.

ADVERTISEMENT

 

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT