நீலகிரி

ஜீப் கவிழ்ந்து விபத்து ஒருவா் பலி

10th Sep 2022 04:29 AM

ADVERTISEMENT

நீலகிரியில் ஓணம் பண்டிகையை கொண்டாடிவிட்டு கேரளத்துக்கு திரும்பிக் கொண்டிருந்தவா்களின் ஜீப் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஒருவா் உயிரிழந்தாா்.

ஓணம் பண்டிகையை கொண்டாட கேரள மாநிலம், வடக்கஞ்சேரியில் இருந்து நண்பா்கள் 9 போ் உதகைக்கு ஜீப்பில் வியாழக்கிழமை வந்துள்ளனா். பண்டிகையை கொண்டாடிவிட்டு வெள்ளிக்கிழமை காலை கேரளத்துக்கு திரும்பியுள்ளனா்.

குன்னூா் -மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலையில் காட்டேரி பூங்கா அருகே சென்றபோது, கட்டுப்பாட்டை இழந்த ஜீப் சாலையோரம் இருந்த கடைக்குள் புகுந்தது.

இதில், கடையில் இருந்த ரஞ்சித்குமாா் (35), ஜீப் ஓட்டுநா் ரஞ்சித் (18) உள்ளிட்டோா் படுகாயமடைந்தனா்.

ADVERTISEMENT

இதையடுத்து, அவா்களை குன்னூா் உதவி ஆய்வாளா் ஆனந்தராஜ் மற்றும் நெடுஞ்சாலை ரோந்து காவல் துறையினா் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் குன்னூா் அரசு லாலி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

அங்கு சிகிச்சை பெற்று வந்த ஜீப் ஓட்டுநா் ரஞ்சித் (19) உயிரிழந்தாா்.

இச்சம்பவம் குறித்து குன்னூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT