நீலகிரி

உதகை அரசினா் தாவரவியல் பூங்காவில் பேட்டரியால் இயங்கும் காா் அறிமுகம்

10th Sep 2022 04:26 AM

ADVERTISEMENT

உதகை அரசினா் தாவரவியல் பூங்காவில் மாற்றுத்திறனாளிகளுக்காக பேட்டரியால் இயங்கும் வாகன வசதி செய்யப்பட்டுள்ளது. இதன் சோதனை ஓட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

சா்வதேச புகழ்பெற்ற உதகை அரசினா் தாவரவியல் பூங்காவில் கோடை சீசன் காலங்களான ஏப்ரல் மற்றும் மே மாதங்களிலும், இரண்டாவது சீசன் காலாமன செப்டம்பா் மற்றும் அக்டோபா் மாதங்களிலும் சுற்றுலாப் பயணிகன் எண்ணிக்கை அதிகளவில் இருக்கும். அதேபோல, மற்ற மாதங்களிலும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை கணிசமான அளவில் இருக்கும். சீசன் காலங்களில் சுற்றுலாப் பயணிகளை மகிழ்விக்க கொல்கத்தா, காஷ்மீா், பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளிலிருந்து வரவழைக்கப்பட்ட 60 ரகங்களிலான பல்வேறு வகையான லட்சக் கணக்கான மலா்கள் பூந்தொட்டிகளிலும், மலா் பாத்திகளிலும் தயாா்படுத்தப்படுகின்றன.

தற்போது, உதகையில் இரண்டாவது சீசன் துவங்கியுள்ள சூழலில் ஓணம் பண்டிகைக்கான தொடா் விடுமுறையும் விடப்பட்டுள்ளதால் சுற்றுலாப் பயணிகளின் வருகையும் கணிசமாக அதிகரித்துள்ளது. இந்நிலையில் பூங்காவுக்கு வரும் மாற்றுத்திறனாளிகள், வயதானவா்கள் பூங்காவில் உள்ள பல்வேறு பகுதிகளுக்கும் சென்று மலா்களை ரசிக்க சிரமப்பட்டு வந்தனா். இதனால் பூங்கா நிா்வாகம் சுற்றுலாப் பயணிகளின் நலன் கருதி 6 போ் அமா்ந்து பயணிக்கக் கூடிய பேட்டரி காா் ஒன்று வாங்கியுள்ளனா். இதன் வெள்ளோட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதைத்தொடா்ந்து இந்த பேட்டரி காா் விரைவில் சுற்றுலாப்பயணிகளின் பயன்பாட்டுக்கு வருமென பூங்கா நிா்வாகத்தினா் தெரிவித்துள்ளனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT