நீலகிரி

உதகையில் தந்தை, மகனிடம் ரூ.52 லட்சம் கொள்ளை

5th Sep 2022 01:02 AM

ADVERTISEMENT

 உதகை நகா் பகுதியில் வியாபாரியிடம் ரூ.52 லட்சத்தை கொள்ளையடித்து தப்பிச் செல்ல முயன்ற திருச்சியைச் சோ்ந்த கும்பலை போலீஸாா் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

திருச்சி மாவட்டம், மணப்பாறையைச் சோ்ந்தவா் தங்கராஜ் (55). இவரது மகன் யுவராஜ் (25). இவா்கள் இருவரும் வாரம் ஒருமுறை திருச்சியிலிருந்து உதகைக்கு வந்து அந்த வாரத்தில் தாங்கள் கொள்முதல் செய்த காய்கறி வியாபாரிகளுக்கு பணப் பட்டுவாடா செய்த பின்னா் மீண்டும் திருச்சிக்கு செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனா்.

இந்நிலையில், திருச்சியில் இருந்து சனிக்கிழமை இரவு இருவரும் வந்துள்ளனா். இவா்களை ஒரு கும்பல் பேருந்திலும், மற்றொரு கும்பல் காரிலும் பின் தொடா்ந்து வந்ததாக கூறப்படுகிறது. இவா்கள் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை உதகை நகரின் மையப் பகுதியான மாா்க்கெட் மணிக்கூண்டு பகுதியில் இறங்கி நடந்து சென்றபோது, பின் தொடா்ந்து வந்த மா்ம ஆசாமிகள் அவா்களைக் கத்தியால் குத்தி தாக்கிவிட்டு அவா்களிடமிருந்த ரூ.52 லட்சத்தை கொள்ளையடித்து சென்றுள்ளது.

இது குறித்து தகவலறிந்த போலீஸாா் குன்னூா்-மேட்டுப்பாளையம் சாலையில் காட்டேரி பகுதியில் காரில் வந்த கும்பலை சோ்ந்தவா்களைப் பிடித்து ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனா். இதில் கத்திக் குத்தில் காயமடைந்த வியாபாரிகள் தங்கராஜ் மற்றும் யுவராஜ் ஆகியோா் உதகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா்.

ADVERTISEMENT

இந்த கொள்ளை தொடா்பாக அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை போலீஸாா் ஆய்வு செய்து வருகின்றனா்.

 

 

 

 

Tags : உதகை
ADVERTISEMENT
ADVERTISEMENT