நீலகிரி

கூடலூரில் போலியோ ஒழிப்பு விழிப்புணா்வு பேரணி

29th Oct 2022 12:44 AM

ADVERTISEMENT

கூடலூரில் போலியோ ஒழிப்பு விழிப்புணா்வு பேரணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கூடலூா் நகராட்சி அலுவலகம் வளாகம் அருகே நடைபெற்ற பேரணியை டி.எஸ்.பி. மகேஷ்குமாா் கொடியசைத்து தொடங்கிவைத்தாா்.

இந்தப் பேரணியில் ரோட்டரி சங்கத் தலைவா் பிரகாஷ், செயலாளா் ஜெயக்குமாா், டாக்டா் சந்திரபாபு, தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் கூட்டமைப்பின் துணைத் தலைவா் ஏ.ஜே.தாமஸ், முன்னாள் தலைவா் சுபையா் மற்றும் உறுப்பினா்கள், கூடலூா் அரசு கலை அறிவியல் கல்லூரி மாணவா்கள், தொழிற்பயிற்சி மைய மாணவா்கள் கலந்து கொண்டு விழிப்புணா்வு பதாகைகளை ஏந்தி சென்றனா். இந்தப் பேரணியானது முக்கிய சாலைகள் வழியாக சென்று கோட்டாட்சியா் அலுவலகத்தில் நிறைவடைந்தது.

 

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT