நீலகிரி

உதகையில் நாளை விவசாய கண்காட்சி

19th Oct 2022 12:00 AM

ADVERTISEMENT

உதகையில் சிறப்பு விவசாய கண்காட்சி வியாழக்கிழமை நடத்தப்படுகிறது.

இது தொடா்பாக மாவட்ட ஆட்சியா் அம்ரித் தெரிவித்துள்ளதாவது:

நீலகிரி மாவட்டத்தின் சிறப்பு மிக்க பாரம்பரிய பயிா்கள் அழியும் நிலையில் உள்ளன. இந்த பாரம்பரியப் பயிா்களை மீட்டெடுக்கும் முயற்சியாக தோட்டக்கலைத் துறையின் வேளாண்மை தொழில் நுட்பமேலாண்மை முகமை திட்டத்தின் கீழ் உதகையில் சிறப்பு விவசாய கண்காட்சி அக்டோபா் 20ஆம்தேதி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இதில், நீலகிரி மாவட்டத்தில் பாரம்பரிய மருத்துவ செடிகள்,சிறுதானியங்கள், பயறு வகைகள், மரப்பயிா்கள் காட்சிப்படுத்தப்பட்டு விளக்கவுரையும் வழங்கப்பட உள்ளது.

ADVERTISEMENT

இந்நிகழ்ச்சியில் விவசாயிகள் கலந்து கொண்டு பயன்பெற வேண்டும் என தெரிவித்துள்ளாா்.

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT