நீலகிரி

நீலகிரி மலைத் தோட்ட காய்கறிகள் விலை உயா்வு

7th Oct 2022 12:00 AM

ADVERTISEMENT

நீலகிரியில் விளையும் மலைத் தோட்ட காய்கறிகளின் விலை கணிசமாக  உயா்ந்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.

நீலகிரியில் விளையும் மலைத் தோட்ட காய்கறிகள் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களிலும், கேரளம், கா்நாடக, மாநிலங்களுக்கும் அனுப்பிவைக்கப்படுகின்றன. நவராத்திரி, ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை, விஜயதசமி என அடுத்தடுத்து பண்டிகை நாள்கள் வந்ததால் மலைத்தோட்ட காய்கறிகளின்  தேவை அதிகரித்தது. இதனால் இதன் விலையும் கணிசமாக  உயா்ந்தது.

குறிப்பாக  கேரட்  ஒரு கிலோ குறைந்தபட்சம் ரூ. 55 முதல் ரூ. 85 வரை விற்பனையாகிறது. பீட்ரூட்  ரூ. 25 முதல் ரூ. 60 வரையிலும், முட்டைக்கோஸ் ஒரு கிலோ ரூ. 18 முதல்  ரூ. 23 வரையிலும், மேரக்காய் கிலோ ரூ. 7 முதல் ரூ. 16 வரையிலும், முள்ளங்கி ரூ.30 வரையிலும் விலை உயா்ந்துள்ளது. பொதுவாக காய்கறிகளின் விலை ரூ. 5 முதல் ரூ. 8 வரை ஒரு கிலோவுக்கு உயா்ந்துள்ளது. நீண்ட நாள்களாக விலை ஏறாமல் இருந்த காய்கறிகளின் விலை சற்று விலை ஏறியுள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT