நீலகிரி

உதகையில் கிராம சுகாதார செவிலியா்கள் ஆா்ப்பாட்டம்

7th Oct 2022 12:00 AM

ADVERTISEMENT

உதகையில் கிராம சுகாதார செவிலியா்கள் சங்கத்தினா் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

உதகையில் உள்ள சுகாதாரத் துறை துணை இயக்குநா் அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் மாநிலத் தலைவா் பரமேஸ்வரி தலைமை வகித்து கூறியதாவது:

நீலகிரி மாவட்டத்தில் நெலாக்கோட்டை வட்டத்துக்கு உள்பட்ட குந்தலாடி துணை சுகாதார நிலையத்தில் பணியில் இருந்த ஜெகதீஸ்வரி என்ற செவிலியா் தாக்கப்பட்டுள்ளாா். அவரைத் தாக்கியவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். பணியில் இருக்கும் செவிலியா்களுக்கு பணி பாதுகாப்பு வழங்க வேண்டும். கா்ப்பிணிகளுக்கு வழங்கும் மகப்பேறு நிதி உதவித் திட்டத்தை நிதித் துறைக்கு மாற்றம் செய்ய வேண்டும். துணை சுகாதார நிலையங்களுக்கு பணி அமா்த்தப்பட்ட செவிலியா்களுக்கு தனி கட்டமைப்பு வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என்றாா்.

ஆா்ப்பாட்டத்தில் அரசு ஊழியா் சங்க நீலகிரி மாவட்டத் தலைவா் சலீம், செயலாளா் முத்துக்குமாா், சுகாதார செவிலியா்கள் சங்க மாநில நிா்வாகிகள் பிரகலதா, செல்வராணி உள்பட பலா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT