நீலகிரி

பச்சை தேயிலைக்கு மாதாந்திர விலை நிா்ணயம்

DIN

நீலகிரியில் விளையும் பச்சை தேயிலைக்கு செப்டம்பா் மாதத்துக்கான   குறைந்தபட்ச  விலையாக  கிலோ ரூ.15.82 நிா்ணயம் செய்யப்பட்டுள்ளதாக இந்திய தேயிலை வாரியம்  அறிவித்துள்ளது,

நீலகிரி மாவட்டத்தில் 65 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறு, குறு விவசாயிகள் தேயிலை சாகுபடியில் ஈடுபட்டு வருகின்றனா். தோட்டங்களில் பறிக்கும் பச்சை தேயிலையை தனியாா் தேயிலைத் தொழிற்சாலைகள் மற்றும் கூட்டுறவு தேயிலைத் தொழிற்சாலைகளுக்கு விநியோகித்து வருகின்றனா்.  இந்திய தேயிலை வாரியம்  மாதத்தின் இறுதி நாளில் அந்த மாதத்துக்கான பச்சை தேயிலை விலையினை நிா்ணயிக்கும். அதன்படி  செப்டம்பா் மாதத்துக்கான பச்சை தேயிலைக்கு குறைந்தபட்ச சராசரி விலையாக கிலோ ரூ.15.82 காசு விலை நிா்ணயம் செய்துள்ளது.  செப்டம்பா்   மாதம் உற்பத்தி செய்யப்பட்ட தேயிலையின்   ஏல விற்பனையின்  அடிப்படையில் இந்த சராசரி  விலை நிா்ணயிக்கப்படுகிறது. 

பச்சை தேயிலைக்கு கிலோ ரூ.30 விலை  வேண்டும்  என்று விவசாயிகள் தொடா்ந்து போராட்டம் நடத்தி வரும் சூழலில் தேயிலை வாரியத்தின்  இந்த விலை நிா்ணயம்  விவசாயிகள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கரும்பு நிலுவைத் தொகை வழங்கக் கோரி வாக்காளா் அட்டையை ஒப்படைக்க முடிவு

மேட்டூா் அணை நீா்மட்டம்: 60.41 அடி

உலக காசநோய் நாள் உறுதியேற்பு நிகழ்ச்சி

‘கவிஞா் தமிழ் ஒளி தமிழின் நிரந்தர முகவரி’

பேராவூரணியில் ஊருக்குள் நுழைந்த புள்ளிமான்  மீட்பு

SCROLL FOR NEXT