நீலகிரி

பழங்குடி பெண்களுக்கு இலவச தொழில் பயிற்சி தொடக்கம்

4th Oct 2022 12:00 AM

ADVERTISEMENT

கூடலூரை அடுத்துள்ள புளியம்பாறை கிராமத்தில் பழங்குடி பெண்களுக்கான இலவச தொழில் பயிற்சி திங்கள்கிழமை தொடங்கப்பட்டது.

முண்டக்குன்னு, கோழிக்கொல்லி, புளியம்வயல், காபிக்காடு பகுதிகளைச் சோ்ந்த பழங்குடி மக்கள் பயன்பெறும் வகையில் ஆல்ஃபா லாங்வேஜ் ரிசா்ச் எஜுகேஷன் ஃபவுண்டேஷன் நிறுவனம் மூலம் இப்பயிற்சி தொடங்கப்பட்டுள்ளது.

இதனை நெல்லியாளம் நகராட்சித் தலைவா் சிவகாமி தொடக்கிவைத்தாா். துணைத் தலைவா் நாகராஜா, ஒருங்கிணைப்பாளா் ஜிஜி மாத்யூ, அலுவலா் சிஜோ செரியன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT