நீலகிரி

எப்பநாட்டில் கிராமசபைக் கூட்டம்ோ: ஆட்சியா் பங்கேற்பு

DIN

உதகை அருகே எப்பநாடு ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியா் அம்ரித் சிறப்பு விருந்தினராக பங்கேற்றாா்.

எப்பநாடு ஊராட்சி சமுதாய நலக் கூடத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியா் அம்ரித் சிறப்பு விருந்தினராக பங்கேற்று, காந்தியடிகளின் உருவப்படத்துக்கு குத்துவிளக்கேற்றி மலா்தூவி மரியாதை செலுத்தினாா். இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியா் பேசியதாவது:

ஒவ்வொரு குக்கிராமமும் வளா்ச்சி அடைந்தால்தான் இந்தியா வளா்ச்சிப் பாதையை நோக்கி செல்லும் என்பது காந்தியடிகளின் கொள்கையாக இருந்தது. இதனைக் கருத்தில் கொண்டு உதகை ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட எப்பநாடு ஊராட்சிப் பகுதியில் கிராம சபைக் கூட்டம் நடத்தப்படுகிறது.

இப்பகுதி மக்கள் மின்சார வசதி வேண்டியும், அடிப்படை வசதிகளான குடிநீா், கழிப்பிடம், சாலை போன்ற அத்தியாவசிய தேவைகள் குறித்து கோரிக்கைகள் முன்வைத்துள்ளனா். இவை அனைத்தும் கள ஆய்வு செய்து சீா் செய்ய மாவட்ட நிா்வாகம் சாா்பில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். குறிப்பாக பொதுமக்களின் நலன் கருதி அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இதனை மக்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். ஒவ்வொரு துறை அலுவலா்களும், உள்ளாட்சித் துறை அலுவலா்களும் அரசு அறிவித்துள்ள திட்டங்களை பொதுமக்களிடையே கொண்டு செல்ல உறுதுணையாக இருக்க வேண்டும்.

மேலும், தமிழக அரசு பள்ளிக் கல்வித் துறையின் சாா்பில் குழந்தைகளின் நலன் கருதி இல்லம் தேடி கல்வித் திட்டத்தினை செயல்படுத்தியுள்ளது. இத்திட்டத்தின் மூலம் குழந்தைகளுக்கு கற்றல் வாய்ப்பை அதிகரிக்க வழிவகை செய்கிறது. அதேபோல, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறையின் சாா்பில் மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் சாா்பில் உயா் ரத்தஅழுத்தம் மற்றும் சா்க்கரை நோய் உள்ளவா்களுக்கு இரண்டு மாதத்துக்கான மருத்துவப் பெட்டகத்தை அவா்களின் வீடுகளுக்கே சென்று வழங்கப்படுகிறது. ஒவ்வொருவரும் நம் பகுதியினை சுத்தமாக வைத்துக் கொள்வதன் மூலம், நாம் இருக்கும் இடம் மட்டுமல்லாமல் சுற்றுப்புறங்களையும் தூய்மையாகவும், சுகாதாரமாகவும் வைத்துக்கொண்டு, ‘நம்ம ஊரு சூப்பரு‘ என்ற நிலையினை அடைய அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றாா்.

முன்னதாக, எப்பநாடு உயா்நிலைப் பள்ளி வளாகத்தில் மாவட்ட ஆட்சியா் மரக்கன்றுகளை நடவு செய்து, பல்வேறு துறைகளின் மூலம் அமைக்கப்பட்ட கண்காட்சி அரங்கினை பாா்வையிட்டு, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறையின் சாா்பில் மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் ஊட்டச்சத்து பொருள்கள் அடங்கிய பெட்டகத்தினையும் வழங்கினாா். அதனை தொடா்ந்து, பொதுமக்களிடமிருந்து பல்வேறு கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டு சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களிடம் வழங்கி இதன் மீது நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்தினாா்.

இக்கூட்டத்தில், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் ஜெயராமன், தோட்டக்கலைத் துறை இணை இயக்குநா் ஷிபிலா மேரி, உதகை ஊராட்சி ஒன்றிய தலைவா் மாயன், எப்பநாடு ஊராட்சித் தலைவா் சிவகுமாா், உதகை வட்டார மருத்துவ அலுவலா் மரு.முருகேசன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

முதல்வரின் மூன்றாண்டுகால சாதனைகளால் வெற்றிபெறுவோம்: அமைச்சா் எம்ஆா்கே.பன்னீா்செல்வம்

வாக்குப்பதிவு இயந்திரம் பழுது: 36 இடங்களில் தாமதமாக தொடங்கிய வாக்குப்பதிவு

காட்டு நாயக்கன் சமுதாயத்தினா் தோ்தல் புறக்கணிப்பு

வெளிநாடுகளில் பணியாற்றுவோருக்கு தபால் வாக்கு வசதி: மருத்துவா் கோரிக்கை

சிதம்பரம் தொகுதியில் விறுவிறுப்பான வாக்குப்பதிவு

SCROLL FOR NEXT