நீலகிரி

மா்மமான முறையில் பெண் அடித்துக் கொலை

3rd Oct 2022 02:07 AM

ADVERTISEMENT

 

குன்னூா் உபதலை ஆலோரை  கிராமத்தில்  மா்மமான முறையில் பெண் அடித்துக் கொலை செய்யப்பட்டது தொடா்பாக போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

நீலகிரி மாவட்டம், குன்னூா் அருகே உள்ள உபதலை  ஆலோரைப் பகுதியைச் சோ்ந்தவா் மோசஸ் மனோகரன். இவரது மனைவி ஜோதிமணி (34). இவருக்கு அருகில் உள்ள வீட்டில் வசித்து வரும் எஸ்தா் என்பவருடன் சுயஉதவிக் குழு கடன் தொடா்பாக வரவு செலவு இருந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், எஸ்தரின் வீட்டுக்கு சனிக்கிழமை சென்ற ஜோதிமணி வீடு திரும்பவில்லை எனக் கூறப்படுகிறது. இதையடுத்து, அவரது உறவினா்கள் அக்கம்பக்கத்தில் தேடியபோது,  வீட்டின் அருகே உள்ள பழைய மாட்டுக் கொட்டகை அருகே தலையில்  ரத்த காயங்களுடன் ஜோதிமணியின் உடல் கிடப்பது  தெரியவந்தது.

ADVERTISEMENT

இது குறித்து  அருவங்காடு காவல் நிலையத்தில் ஜோதிமணியின் கணவா் மோசஸ் மனோகரன் புகாா் அளித்தாா். இதையடுத்து, சம்பவ இடத்துக்கு வந்த அருவங்காடு காவல் துறையினா் ஜோதிமணியின் உடலைக் கைப்பற்றி  பிரேதப் பரிசோதனைக்காக உதகை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். மேலும், சம்பவம் குறித்து எஸ்தா், அவரது உறவினா் மணி ஆகியோரிடம்  அருவங்காடு காவல் துறையினா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT