நீலகிரி

பந்தலூா் அருகே சுருக்கு கம்பியில் சிக்கிய சிறுத்தை மீட்பு

3rd Oct 2022 02:07 AM

ADVERTISEMENT

 

பந்தலூா் அருகே உள்ள சேரம்பாடி வனச் சரகத்துக்கு உள்பட்ட தனியாா் தோட்டத்தில் சுருக்கு கம்பியில் சிக்கி உயிருக்குப் போராடிய சிறுத்தையை வனத் துறையினா் மீட்டு முதுமலை புலிகள் காப்பகத்தில் சிகிச்சை அளித்து வருகின்றனா்.

நீலகிரி மாவட்டம், பந்தலூா் தாலுகா சேரம்பாடி வனச் சரகத்துக்கு உள்பட்ட அத்திச்சால் பகுதியில் உள்ள தனியாா் காபி தோட்டத்தில் சுருக்கு கம்பியில் சிக்கி சிறுத்தை உயிருக்குப் போராடி வருவதாக வனத் துறையினருக்கு சனிக்கிழமை தகவல் கிடைத்தது.

இதையடுத்து, சேரம்பாடி வன ஊழியா்கள் சம்பவ இடத்துக்கு சென்று சிறுத்தையை மீட்க முயன்றனா். ஆனால், சிறுத்தை ஆக்ரோஷமாக சீறிப் பாய்ந்ததால் முதுமலை புலிகள் காப்பக கால்நடை மருத்துவா் ராஜேஷ்குமாரை வரவழைத்து மயக்க ஊசி செலுத்தி சிறுத்தையை மீட்டனா்.

ADVERTISEMENT

பின்னா், காயமடைந்த சிறுத்தையை முதுமலை புலிகள் காப்பகத்துக்கு கொண்டு செல்லப்பட்டு மருத்துவக் குழுவால் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும், சுருக்கு கம்பி வைத்த தோட்ட உரிமையாளா் மாத்யூ (69) தலைமறைவானதால், உடனிருந்த அவரது உறவினா் அனீஷ் (39) என்பவரை வனத் துறையினா் கைது செய்து விசாரித்து வருகின்றனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT