நீலகிரி

உதகையில் சாலை விபத்து: கேரளசுற்றுலாப் பயணிகள் 6 போ் காயம்

1st Oct 2022 11:45 PM

ADVERTISEMENT

 

உதகையில் காமராஜா் சாகா் அணைப் பகுதியில் சுற்றுலாப் பயணிகள் வந்த காா் கவிழ்ந்ததில், கேரள மாநிலத்தைச் சோ்ந்த 6 போ் பலத்த காயமடைந்தனா்.

கேரள மாநிலம், கோழிக்கோடு பகுதியில் இருந்து சஜி, திவ்யா உள்பட ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 6 போ் உதகைக்கு சுற்றுலா வந்தனா். இவா்கள் காமராஜா் சாகா் அணை வளைவு பகுதியில் சனிக்கிழமை வந்தபோது வாகனம் கட்டுப்பாட்டை இழந்து தலைகீழாக கவிழ்ந்தது. இதில், காரில் இருந்த 6 பேரும் பலத்த காயமடைந்தனா்.

பின்னால் வந்த வாகனங்களில் இருந்தவா்கள், அவா்களை மீட்டு, உதகை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். விபத்து குறித்து புதுமந்து போலீஸாா் வழக்குப் பதிந்துள்ளனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT