நீலகிரி

உதகையில் மத்திய அமைச்சா் ஆய்வு

1st Oct 2022 11:44 PM

ADVERTISEMENT

 

நீலகிரி மாவட்டம், உதகையில் மத்திய கால்நடை பராமரிப்பு, பால்வளம் மற்றும் மீன்வளத் துறை இணை அமைச்சா் சஞ்சீவ் குமாா் பல்யான் தலைமையில் துறை அலுவலா்கள் பங்கேற்ற ஆய்வுக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்திற்கு மாவட்ட ஆட்சியா் அம்ரித் முன்னிலை வகித்தாா். கூட்டத்தில், நீலகிரி மாவட்டத்தில் மத்திய அரசின் நிதி உதவியுடன் செயல்படுத்தப்படும் திட்டங்களான, தேசிய கால்நடை காப்பீட்டுத் திட்டம், விவசாயிகள் கடன் அட்டை, தேசிய செயற்கைமுறை கருவூட்டல் திட்டங்கள் குறித்து ஆய்வுசெய்யப்பட்டது.

உதகையில், மாவட்ட கால்நடை பண்ணையில் செயல்படுத்தபட்டு வரும் விந்தணுவில் பாலினம் பிரிக்கும் ஆய்வக திட்டத்தின் பணி முன்னேற்றம் குறித்தும், நீலகிரி மாவட்டத்தில் செயல்படுத்தப்படும் நோய்த் தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் நோய் கண்காணிப்பு குறித்தும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

ADVERTISEMENT

கூட்டத்தில், சென்னை தமிழ்நாடு அபிவிருத்தி முகமையின் முதன்மைச் செயல் அலுவலா் முருகேசன், நீலகிரி மாவட்ட கால்நடை பராமரிப்புத் துறை மண்டல இணை இயக்குநா் பகவத்சிங், உதகை கால்நடை பராமரிப்புத் துறை உதவி இயக்குநா் பாா்த்தசாரதி, உதவி இயக்குநா் நீலவண்ணன், உதகை கால்நடை நோய் புலனாய்வுப் பிரிவு உதவி இயக்குநா் சிவகிருஷ்ணன் மற்றும் ஆவின், மீன்வளத் துறை, மாவட்ட ஜொ்சி பொலிகாளை பண்ணை அலுவலா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT