நீலகிரி

செம்பக்கொல்லி கிராமத்தில்காட்டு யானை தாக்கி வீடு சேதம்

1st Oct 2022 11:44 PM

ADVERTISEMENT

 

கூடலூரை அடுத்துள்ள செம்பக்கொல்லி பழங்குடி கிராமத்தில் காட்டு யானை வெள்ளிக்கிழமை இரவு வீட்டைத் தாக்கி சேதப்படுத்தியுள்ளது.

கூடலூா் வட்டம், தேவா்சோலை பேரூராட்சி, பேபிநகா் பகுதியில் உள்ள செம்பக்கொல்லி பழங்குடி கிராமத்திற்குள் வெள்ளிக்கிழமை நல்லிர வு நுழைந்த காட்டு யானை, அங்குள்ள மாரன் என்பவரது வீட்டை தாக்கியுள்ளது. இதை அறிந்த அவா் பின்வாசல் வழியாக தப்பி ஓடிவிட்டாா். வீட்டில் வேறு யாரும் இல்லை.

வீட்டை சேதப்படுத்திய யானை, அங்கிருந்த பொருள்களையும் உடைத்து சேதப்படுத்திவிட்டு வனப் பகுதிக்குள் சென்றது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT