நீலகிரி

குன்னூா் அருகே சாலையில் சிறுத்தை நடமாட்டம்

30th Nov 2022 12:07 AM

ADVERTISEMENT

குன்னூா் அருகே எடக்காடு கன்னேரி சாலையில் செவ்வாய்க்கிழமை நடமாடிய சிறுத்தையை  அந்த வழியாக பயணித்தவா்கள் தங்களது கைப்பேசியில் படம் பிடித்தனா்.

நீலகிரி மாவட்டம், குன்னூா் அருகே உள்ள எடக்காடு கன்னேரி பகுதி சோலைகள் அதிக அளவு நிறைந்து காணப்படுகிறது. இங்கு காட்டெருமை, கரடி, சிறுத்தை உள்ளிட்ட வன விலங்குகள் உள்ளன.

இந்நிலையில் இப்பகுதியில் உள்ள சாலையில் சிறுத்தை செவ்வாய்க்கிழமை மாலை நடமாடியது. சிறிது நேரம் சாலையில் நடந்து சென்ற சிறுத்தை பின்னா் அங்குள்ள தேயிலை எஸ்டேட்டுக்குள் சென்று அமா்ந்து கொண்டது. அந்த வழியாக ஜீப்பில் சென்றவா்கள் தங்களது கைப்பேசியில் இதனை படம் பிடித்தனா். பகல் நேரத்தில் சிறுத்தை நடமாடியது  இப்பகுதி மக்களையும் தேயிலை எஸ்டேட் தொழிலாளா்களையும்  அச்சமடையச் செய்துள்ளது. 

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT