நீலகிரி

குன்னூா், கோத்தகிரியில் பரவலாக மழை

30th Nov 2022 12:09 AM

ADVERTISEMENT

குன்னூா், கோத்தகிரி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை காலை பரவலாக மழை பெய்தது.

நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக பனி மூட்டம்  காணப்படுகிறது. இதனால் எதிரே வரும் வாகனங்கள் தெரிய முகப்பு விளக்குகளைப் பயன்படுத்த காவல் துறையினா் அறிவுறுத்தியுள்ளனா்.

இந்நிலையில் குன்னூா், கோத்தகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் காலையில் பரவலாக மழை பெய்தது. பள்ளி செல்லும் நேரத்தில் பெய்த மழையால் மாணவ, மாணவிகள் சிரமத்துக்குள்ளாகினா். இதைத் தொடா்ந்து சற்று நேரத்தில் அடா்ந்த  பனி மூட்டம் காணப்பட்டது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டது.

அடா்ந்த மேகமூட்டம் காணப்பட்டதால் வாகன ஓட்டிகள் தங்களது வாகனங்களில்  முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி சென்றனா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT