ஆட்டோக்களின் எல்லையை விரிவுப்படுத்தக் கோரி குன்னூரில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆட்டோ ஓட்டுநா்கள் திங்கள்கிழமை வேலை நிறுத்தில் ஈடுபட்டனா்.
நீலகிரி மாவட்டத்தில் இயங்கும் ஆட்டோக்கள் தற்போது 15 கிலோ மீட்டா் வரை இயக்க அனுமதிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், எல்லையை மேலும் விரிவுப்படுத்தக் கோரி குன்னூா், கோத்தகிரியைச் சோ்ந்த ஆட்டோ ஓட்டுநா்கள் ஒரு நாள் வேலை நிறுத்தத்தில் திங்கள்கிழமை ஈடுபட்டனா்.
இதனால், சுற்றுலாப் பயணிகள், மாணவ, மாணவிகள் அவதியடைந்தனா்.