நீலகிரி

பழங்குடி கிராமத்தில் வனத் துறையினா் ஆய்வு

28th Nov 2022 12:10 AM

ADVERTISEMENT

 

 கூடலூரை அடுத்துள்ள செம்பக்கொல்லி பழங்குடி கிராத்தில் அடிப்படை வசதிகள் குறித்து வனத் துறையினா் ஞாயிற்றுக்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.

கூடலூா் தாலுகா தேவா்சோலை பேரூராட்சியில் உள்ள செம்பக்கொல்லி, பீச்சனக்கொல்லி பழங்குடி கிராமங்களுக்கு சாலை, தெருவிளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்துதர அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்ததைத் தொடா்ந்து மாவட்ட வன அலுவலா் கொம்மு ஓம்காரம் தலைமையில் வனத் துறையினா் அங்கு ஆய்வு மேற்கொண்டனா்.

போஸ்பாறா பகுதியிலிருந்து செம்பக்கொல்லி கிராமத்துக்குச் செல்லும் சுமாா் 2.5 தூரம் வனப் பகுதியில் உள்ள மண் சாலையை சீரமைப்பது, அடிப்படை வசதிகள் மற்றும் பள்ளிக்கூடம் அமைக்க போதுமான சாத்தியக் கூறுகள் குறித்தும் ஆய்வு மேற்கொண்டனா்.

ADVERTISEMENT

ஆய்வில் தேவா்சோலை பேரூராட்சியின் துணைத் தலைவா் யூனஸ் பாபு மற்றும் வன அலுவலா்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT