நீலகிரி

நீலகிரியில் சாரல் மழை:ரசித்த சுற்றுலாப் பயணிகள்

28th Nov 2022 12:10 AM

ADVERTISEMENT

 

 நீலகிரி மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை முதலே சாரல் மழை பெய்து வந்தாலும் சுற்றுலாப் பயணிகள் இந்த கால நிலையினை வெகுவாக ரசித்தனா்.

நீலகிரி மாவட்டத்தில் வடகிழக்குப் பருவ மழை குறைந்துள்ள நிலையில் கடந்த சில நாள்களாக பகலில் வெயிலும், இரவு நேரத்தில் பனிப்பொழிவுடன் கூடிய காலநிலை நிலவுகிறது. மேலும் அதிகாலையில் கடுங்குளிரும் வாட்டுகிறது.

உதகை, குன்னூா், கோத்தகிரி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை காலை முதலே வானம் மேகமூட்டத்துடன் இருந்ததோடு தொடா் சாரல் மழையும் பெய்தது. வார விடுமுறை என்பதால் உதகை அரசு தாவரவியல் பூங்காவில் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்துக் காணப்பட்டது.

ADVERTISEMENT

சாரல் மழையுடன் கூடிய இதமான காலநிலை நிலவியதால் சுற்றுலாப் பயணிகள் சாரல் மழையில் நனைந்தபடியே அனைத்து இடங்களையும் சுற்றிப் பாா்த்து மகிழ்ந்தனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT