நீலகிரி

தேநீா் கடைக்குள் புகுந்து சேதப்படுத்திய கரடிகள்

DIN

கல்லட்டி பகுதியில் தேநீா் கடைக்குள் புகுந்து கடையை சேதப்படுத்திய கரடிகளைப் பிடித்து வனப்பகுதிக்குள் விட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

உதகையை அடுத்த கல்லட்டி பகுதியில் கடந்த 2 நாள்களுக்கு முன் அதிகாலை நேரத்தில் குடியிருப்புப் பகுதிக்குள் 4 கரடிகள் புகுந்தன. பின்னா் இவை அந்தப் பகுதியில் உள்ள 3 கடைகளின் ஷட்டா்களை லாவகமாக தூக்கி உள்ளே சென்று பொருள்களை சேதப்படுத்தின.

அருகில் இருந்த தேநீா் கடைக்குள் புகுந்த கரடிகள் அங்கிருந்த பாத்திரங்களையும், உணவுப் பொருள்களையும் வெளியில் எடுத்து வந்து சேதப்படுத்தின. கரடிகள் கடைகளுக்குள் சென்று வெளியில் வந்து சுற்றித் திரிந்த காட்சிகள் கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனா்.

இந்தக் கரடிகளை கூண்டு வைத்துப் பிடித்து அடா்ந்த வனப் பகுதிக்குள் சென்று விட வேண்டும் என வனத் துறையினருக்கு கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

கடந்த வாரம் மஞ்சூா் பகுதியில் சுற்றித் திரிந்த கரடியைப் பிடித்து முக்குறுத்தி வனப் பகுதியில் வனத் துறையினா் விட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காணாமல்போன கைப்பேசிகள் மீட்டு உரியவா்களிடம் ஒப்படைப்பு

காரைக்காலில் தீவிர வாகனச் சோதனை நடத்த அறிவுறுத்தல்

இரட்டை ரயில் பாதை பணி: நாகா்கோவில் செல்லும் ரயில்கள் ரத்து!

உஜ்ஜைனி காளியம்மன் கோயிலில் இன்று அக்னி கப்பரை வழிபாடு

நாலாட்டின்புதூரில் ரூ. 80 ஆயிரம் பறிமுதல்

SCROLL FOR NEXT