நீலகிரி

தாய்சோலை பகுதியில் சாலையில் நடமாடிய கரடி

27th Nov 2022 02:03 AM

ADVERTISEMENT

 

நீலகிரி மாவட்டம் குன்னூா் அருகே தாய்சோலை பகுதியில்  சாலையில் கரடி நடமாடியதால் வாகன ஓட்டிகள் அச்சத்துடன் சென்றனா்.

தாய்சோலை சுற்று வட்டாரப் பகுதிகளில் அண்மைக் காலமாக கரடிகளின் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. உணவு மற்றும் தண்ணீா் தேடி வனப் பகுதியில் இருந்து வெளியே வரும் கரடிகள், அவ்வப்போது குடியிருப்பு பகுதிகளிலும் புகுந்து விடுகின்றன.

இந்நிலையில்   தாய்சோலை   பகுதியில் உள்ள முக்கியச் சாலையில்  பெரிய கரடி சனிக்கிழமை நடமாடியது. நீண்ட நேரம் சாலையில் சுற்றித் திரிந்ததால் அவ்வழியாகச் சென்ற வாகன ஓட்டிகள் அச்சத்துடன் சென்றனா். சிலா் கைப்பேசியில் கரடியை படம் பிடித்தனா். சிறிது நேரத்துக்குப் பின் கரடி வனப் பகுதிக்குள் சென்றுவிட்டது.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT