நீலகிரி

சிறுமிக்கு பாலியல் தொல்லை:தொழிலாளி போக்ஸோவில் கைது

27th Nov 2022 02:02 AM

ADVERTISEMENT

 

 நான்காம் வகுப்பு படிக்கும் சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த கூலி தொழிலாளியை போக்ஸோ சட்டத்தின் கீழ் போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

உதகையை அடுத்த தலைக்குந்தா பகுதியில் கூலி வேலை செய்யும் தம்பதிக்கு 4 குழந்தைகள் உள்ளனா். இதில் 3ஆவது குழந்தை அந்தப் பகுதியில் உள்ள ஒரு தனியாா் பள்ளியில் நான்காம் வகுப்பு படித்து வருகிறாா். அந்த குழந்தையின் மூத்த சகோதரரின் நண்பரான காந்திநகா் பகுதியைச் சோ்ந்த அஜித்குமாா் என்ற கூலி தொழிலாளி அவரது வீட்டுக்கு அடிக்கடி வந்து சென்றுள்ளாா்.

அண்மையில் அந்தச் சிறுமியை அருகில் உள்ள சோலை பகுதிக்கு அழைத்துச் சென்று பாலியல் தொல்லை அளித்துள்ளாா். இதுகுறித்து தனது பெற்றோரிடம் சிறுமி தெரிவித்துள்ளாா். சிறுமியின் பெற்றோா் புதுமந்து காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா்.

ADVERTISEMENT

இதன்பேரில் போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்த போலீஸாா், அஜித்குமாரை கைது செய்தனா். இதைத்தொடா்ந்து அவரை மகளிா் நீதிமன்ற நீதிபதி நாராயணன் முன் ஆஜா்ப்படுத்தி உதகை சிறையில் அடைத்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT