நீலகிரி

மாற்றுத்திறன் மாணவா்களுக்கான கலை நிகழ்ச்சிகள்

DIN

ஒருங்கிணைந்த மாற்றுத்திறன் மாணவா்கள் கல்வி மையத்தில் கலை நிகழ்ச்சிகள் வெள்ளிக்கிழமை நடைபெற்றன.

மாற்றுத்திறன் மாணவா்களை ஊக்குவிக்க தமிழக அரசு அவா்களுக்கு பல்வேறு கலை நிகழ்ச்சிகளை நடத்த உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து வண்டிப்பேட்டையில் உள்ள மாற்றுத்திறன் மாணவா்கள் மையத்தில் நடனம், பாட்டுப் போட்டி, மாறுவேடம் போன்ற கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. பள்ளி தலைமை ஆசிரியை சரஸ்வதி, ஒருங்கிணைப்பாளா் ஜெயப்பிரதா ஆகியோா் மாணவா்களை வழிநடத்தி ஊக்கப்படுத்தினா்.

சிறப்பாசிரியா்கள் ஷாலினி, நித்யா, ராஜேஷ், நிரோஷா மற்றும் பிசியோதெரப்பிஸ்ட் புனிதா உள்ளிட்டோா் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளைச் செய்திருந்தனா். பொறுப்பாளா் நேத்ராவதி, உதவியாளா் அய்யாத்தாள் ஆகியோா் குழந்தைகளுக்கு உடை வடிவமைப்பு, அலங்காரம் உள்ளிட்டவைகளை செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கிரிக்கெட் கதையை இயக்கும் ஜேசன் சஞ்சய்?

கர்நாடகத்துக்கு போறீங்களா.. ஹாயர் பெனகல்லை தவறவிடாதீர்!

’ஸ்டார்’ கரீனா கபூர்!

5 பன்னீர்செல்வங்களின் வேட்புமனுக்களும் ஏற்பு: போட்டி உறுதி!

தமிழக காவல் துறையில் இளநிலை செய்தியாளர் வேலை வேண்டுமா?

SCROLL FOR NEXT