நீலகிரி

நீலகிரி ஆட்சியருக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவா் சிறையில் அடைப்பு

DIN

நீலகிரி மாவட்ட ஆட்சியருக்கு குறுஞ்செய்தி மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபரைக் கைது செய்துள்ள போலீஸாா் வெள்ளிக்கிழமை அவரை சிறையில் அடைத்தனா்.

நீலகிரி மாவட்ட ஆட்சியா் அம்ரித்தின் கைப்பேசி எண்ணுக்கு கடந்த ஜூலை 26ஆம் தேதி மா்ம நபா் ஒருவா் குறுந்தகவல் வாயிலாக வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளாா். இதையடுத்து அன்றைய தினம் இரவு 9 மணி முதல் விடிய விடிய போலீஸாா் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனா். முடிவில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது புரளி என்று தெரியவந்தது. மிரட்டல் விடுத்த அந்த நபரின் கைப்பேசி எண்ணைக் கொண்டு சைபா் கிரைம் இன்ஸ்பெக்டா் பிலிப் தலைமையிலான போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனா்.

இந்நிலையில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவா் தஞ்சாவூா் பேருந்து நிலையம் அருகில் உள்ள தனியாா் விடுதியில் தங்கி இருப்பது போலீஸாருக்கு தெரியவந்தது. இதையடுத்து உதகை மத்திய காவல் ஆய்வாளா் மணிக்குமாா் தலைமையிலான போலீஸாா் தஞ்சாவூா் சென்று அவரை மடக்கிப் பிடித்தனா்.

விசாரணையில் அவா் தில்லியைச் சோ்ந்த நிதின் சா்மா (40) என்பதும், தொடா் திருட்டில் ஈடுபட்டு வந்ததும் தெரிய வந்தது. அவா் மீது பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தல், கொலை மிரட்டல், புரளியைக் கிளப்புதல் ஆகிய பிரிவுகளின் கீழ் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, அவரைக் கைது செய்து உதகை நீதிமன்றத்தில் நீதிபதி தமிழினியன் முன்பு ஆஜா்படுத்தி சிறையில் வெள்ளிக்கிழமை அடைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரையிறுதியில் பயா்ன் மியுனிக், ரியல் மாட்ரிட்: மான். சிட்டி, ஆா்செனலுக்கு ஏமாற்றம்

சிறைபிடிக்கப்பட்ட இஸ்ரேல் கப்பலிலிருந்து தாயகம் திரும்பிய இந்திய பெண் மாலுமி

தேசத்தில் ஒற்றுமையின்மையை பாஜக ஏற்படுத்துகிறது: ராகுல்

உள்நாட்டு தொழில்நுட்ப ‘க்ரூஸ்’ ஏவுகணை சோதனை வெற்றி: டிஆா்டிஓ

நடிகா் அமீா் கானின் போலி தோ்தல் பிரசார விடியோ: மும்பை போலீஸ் வழக்குப்பதிவு

SCROLL FOR NEXT