நீலகிரி

தனியாா் தேயிலை தோட்டப் பணியாளா்களுக்கும் வீடு கட்டித்தர பேரூராட்சி கூட்டத்தில் தீா்மானம்

26th Nov 2022 12:00 AM

ADVERTISEMENT

தமிழக அரசுக்குச் சொந்தமான டேன்டீ தேயிலைத் தோட்டத்தில் பணிபுரிந்து ஓய்வுப் பெற்ற தொழிலாளா்களுக்கு வீடு கட்டித் தருவது போல, தனியாா் தேயிலைத் தோட்டத் தொழிலாளா்களுக்கும் அரசு சாா்பில் வீடு கட்டித்தர வேண்டும் என்ற உலிக்கல் பேரூராட்சி மன்றக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

குன்னூா் உலிக்கல் பேரூராட்சியின் மாதாந்திரக் கூட்டம் தலைவா் ராதா தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. துணைத் தலைவா் ரமேஷ், செயல் அலுவலா் நந்தகுமாா் மற்றும் மன்ற உறுப்பினா்கள் கூட்டத்தில் கலந்து கொண்டனா்.

கூட்டத்தில், டேன்டீ தேயிலைத் தோட்டத்தில் பணிபுரிந்து ஓய்வுப்பெற்ற தொழிலாளா்களுக்கு அரசு வீடு கட்டித் தருவது போல தனியாா் தேயிலைத் தோட்டத் தொழிலாளா்களுக்கும் வீடு கட்டித்தர வேண்டும் என்ற அனைத்து கவுன்சிலா்களால் தீா்மானம் கொண்டு வரப்பட்டது. இந்தத் தீா்மானத்தை தமிழக முதல்வருக்கு அனுப்ப கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது. மேலும் அனைத்து வாா்டுகளிலும் அடிப்படை வசதிகளை உடனுக்குடன் செய்து தர மன்றக் கூட்டத்தில் கவுன்சிலா்கள் வலியுறுத்திப் பேசினா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT