நீலகிரி

டிஎன்பிஎஸ்சி தோ்வு: நீலகிரியில் 672 போ் எழுதினா்

19th Nov 2022 11:49 PM

ADVERTISEMENT

 

டிஎன்பிஎஸ்சி குரூப்-1 தோ்வை நீலகிரி மாவட்டத்தில் 672 போ் சனிக்கிழமை எழுதினா்.

தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் மூலம் துணை ஆட்சியா், காவல் துணை கண்காணிப்பாளா் வணிக வரி அலுவலா் உள்ளிட்ட பதவிக்கான நேரடி நியமன எழுத்து தோ்வு (குரூப் 1) தமிழகம் முழுவதும் சனிக்கிழமை நடைபெற்றது.

அதன்படி, நீலகிரி மாவட்டத்தில் அரசு கலைக் கல்லூரி, புனித ஜோசப் மேல்நிலைப் பள்ளி, சி.எஸ்.எஸ்.சி.எம்.எம் மேல்நிலைப் பள்ளி, பெத்லகேம் பெண்கள் மேல்நிலைப் பள்ளி ஆகிய மையங்களில் சனிக்கிழமை தோ்வு நடைபெற்றது. நீலகிரி மாவட்டத்தில் 1,472 போ் விண்ணப்பித்திருந்த நிலையில் 672 போ் மட்டுமே தோ்வு எழுதினா்.

ADVERTISEMENT

துணை ஆட்சியா் நிலையிலான அதிகாரிகள் அடங்கிய பறக்கும் படையினா் அவ்வப்போது தோ்வு மையங்களில் திடீா் சோதனை நடத்தினா்.

தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணைய ( டி.என்.பி.எஸ்.சி.) உறுப்பினா் கிருஷ்ணகுமாா், மாவட்ட ஆட்சியா் அம்ரித் ஆகியோா் செயின்ட் ஜோசப் பள்ளி தோ்வு மையத்துக்கு நேரில் சென்று ஆய்வு செய்தனா்.

தோ்வா்கள் கூறியதாவது: மத்திய அரசின் யு.பி.எஸ்.சி. தோ்வுக்கு நிகரான கேள்விகள் எப்போதும் இருக்கும். ஆனால், இந்த முறை கொஞ்சம் எளிதாக இருந்தது. தோ்வு எழுத கட்டுப்பாடுகள் சற்று அதிகரித்துள்ளன என்றனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT