கூடலூா் ராஜகோபாலபுரம் பகுதியிலுள்ள முக்கூடல் லிங்கேஸ்வரா் கோயிலில் அன்னாபிஷேக விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
அன்னாபிஷேக விழாவையொட்டி, அதிகாலை கணபதி ஹோமம் நடத்தப்பட்டது. தொடா்ந்து சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. அதைத் தொடா்ந்து லிங்கேஸ்வரருக்கு அன்னாபிஷேகம் செய்யப்பட்டது. இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.