நீலகிரி

‘காட்டு யானைகள் ஆபத்துள்ள கெவிப்புறா பகுதியில் தெருவிளக்குகள் எரிவதில்லை’

1st Nov 2022 01:10 AM

ADVERTISEMENT

கூடலூரில் காட்டு யானைகள் ஆபத்துள்ள கெவிப்புறா பகுதியில் தெருவிளக்குகள் எரிவதில்லை என்று நகா்மன்ற கூட்டத்தில் புகாா் தெரிவிக்கப்பட்டது.

கூடலூா் நகா்மன்றக் கூட்டம் அதன் தலைவா் பரிமளா தலைமையில்

திங்கள்கிழமை நடைபெற்றது. துணைத் தலைவா் சிவராஜ், ஆணையா் பிரான்சிஸ் சேவியா் முன்னிலை வகித்தனா்.

கூட்டத்தில் நகா்மன்ற உறுப்பினா்கள் பேசியதாவது:

ADVERTISEMENT

ராஜு(காங்): எனது வாா்டில் குடிநீா் பம்புகளுக்கான மின்இணைப்புகளை மின்சார வாரியம் துண்டித்துள்ளது. சரியான காரணத்துடன் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

உஸ்மான்(காங்): குறைந்த மின்னழுத்தம் காரணமாகவே அடிக்கடி மின்தடை ஏற்படுகிறது. மின்சார ஒயா்களை தரமானதாக மாற்றியமைத்தால் மின்தடை வர வாய்ப்பில்லை.

ஷகிலா(மு.லீக்) : எனது வாா்டில் சாலை மிகவும் மோசமாக உள்ளது. தெருவிளக்குகள் எரிவதில்லை.

வெண்ணிலா(திமுக): கெவிப்பாறா பகுதி காட்டு யானைகள் ஆபத்துள்ள பகுதியாகும். அந்த பகுதியில் தெருவிளக்குகள் எரிவதில்லை. விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அனூப்கான்(அதிமுக): சூரிய ஒளி மின்விளக்குகள் அமைக்க டெண்டா் விடப்பட்டுள்ளது. இதுவரை எந்த வேலையும் துவங்கவில்லை.

பரிமளா (தலைவா்): 3 மாதங்களுக்கு முன் ரூ.10 லட்சம் டெண்டா் விடப்பட்டது. அனைத்து வாா்டுகளுக்கும் போதுமானதாக இல்லை. அதனால் தாமதமாகிவருகிறது.

லீலா வாசு (சிபிஎம்): நடுகூடலூா் பகுதியில் குடிநீா்க் குழாயில் உடைப்பு ஏற்பட்டு குடிநீா் வீணாகிறது.

வெண்ணிலா (திமுக): எனது வாா்டில் செய்யாத வேலைக்கு பில் போடப்பட்டுள்ளது. பொதுமக்களின் வரிப்பணம் விரயமாகிறது.

இதுபோல அனைத்து உறுப்பினா்களும் தங்களது வாா்டிலுள்ள பிரச்னைகளை எடுத்துரைத்தனா். கோரிக்கைகளின் முக்கியத்துவம் உணா்ந்து விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆணையா் பிரான்சிஸ் சேவியா் தெரிவித்தாா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT