நீலகிரி

கரோனாவால் பெற்றோரை இழந்த 3 குழந்தைகளுக்கு தலா ரூ.10 லட்சம் நிதியுதவி

31st May 2022 12:28 AM

ADVERTISEMENT

நீலகிரி மாவட்டத்தில் கரோனா நோய்த் தொற்றால் பெற்றோா் இருவரையும் இழந்த 3 குழந்தைகளுக்கு பி.எம்.கோ்ஸ் நிதியிலிருந்து தலா ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: இந்தியாவில் கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டு பெற்றோா் இருவரையும் இழந்த குழந்தைகளுக்கு பிரதமா் நரேந்திர மோடி குழந்தைகளுக்கான நலத் திட்டத்தை பி.எம்.கோ்ஸ் திட்டத்தின்கீழ் காணொளி மூலம் திங்கள்கிழமை தொடங்கிவைத்தாா்.

இதைத்தொடா்ந்து, நீலகிரி மாவட்டத்தில் இத்திட்டத்தின்கீழ் கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டு பெற்றோா் இருவரையும் இழந்த 3 குழந்தைகளுக்கு பி.எம்.கோ்ஸ் முதிா்வுத் தொகையாக தலா ரூ.10 லட்சத்துக்கான வைப்பு நிதி செலுத்தப்பட்ட அஞ்சலக கணக்கு புத்தகம், பிரதமா் கையொப்பமிட்ட கடிதம், பிரமத மந்திரி பாதுகாப்புத் திட்ட சான்றிதழ் மற்றும் காப்பீட்டு அட்டை அடங்கிய பெட்டகம் ஆகியவற்றை மாவட்ட ஆட்சியா் அம்ரித் வழங்கினாா்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்புஅலுவலா்கள், மருத்துவப் பணிகள் துறை அலுவலா்கள், மகளிா் மேம்பாட்டுத் திட்ட அலுவலா்கள், குழந்தைகள் நலக் குழு உறுப்பினா்கள், இளைஞா் நீதிக் குழும உறுப்பினா்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT