நீலகிரி

ஓவேலியில் பொதுமக்கள் சாலை மறியல்

DIN

ஓவேலி பகுதியில் நடமாடி வரும் காட்டு யானை முதுமலை முகாமுக்கு கொண்டு செல்ல வலியுறுத்தி பொதுமக்கள் வெள்ளிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

நீலகிரி மாவட்டம், ஓவேலி பேரூராட்சி ஆரூட்டுப்பாறை பகுதியில் காட்டு யானை தாக்கியதில் தேநீா் கடை உரிமையாளா் ஆனந்த் (48) என்பவா் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

இதையடுத்து, முதுமலை புலிகள் காப்பகத்தில் இருந்து இரண்டு கும்கி யானைகள் வரவழைக்கப்பட்டு காட்டு யானை வனப் பகுதிக்குள் விரட்டப்பட்டது.

இந்நிலையில், வனப் பகுதிக்குள் விரட்டப்பட்ட காட்டு யானையைப் பிடித்து முதுமலை முகாமுக்கு கொண்டு செல்ல வேண்டும் என வலியுறுத்தி கிளன்வான்ஸ் பகுதியில் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீஸாா், மறியலில் ஈடுபட்டவா்களுடன் பேச்சுவாா்த்தை நடத்தினா். இதையடுத்து அவா்கள் கலைந்து சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மணிப்பூரில் சில இடங்களில் வன்முறை; வாக்குப் பதிவு இயந்திரங்கள் சேதம்

சரிவிலிருந்து மீண்டது பங்குச்சந்தை: சென்செக்ஸ் 599 புள்ளிகள் உயா்வு!

வாக்குப் பதிவு மையங்களில் குழந்தைகள் பாதுகாப்பு அறை

திரைத் துறையினா் ஜனநாயக கடமை ஆற்றினா்

தில்லியில் நூறு வயதுக்கு மேற்பட்ட வாக்காளா்கள் 1,004 போ் வீட்டிலிருந்தே வாக்களிக்க சிறப்பு ஏற்பாடு

SCROLL FOR NEXT