நீலகிரி

காவல் துறை சாா்பில் தலைக்கவச விழிப்புணா்வு

25th May 2022 12:51 AM

ADVERTISEMENT

கோத்தகிரி-மேட்டுப்பாளையம் மலைப் பாதையில் இருசக்கர வாகன ஓட்டிகளிடம் கட்டாயம் தலைக்கவசம் அணிவது குறித்து கோத்தகிரி போக்குவரத்து காவல் துறையினா் செவ்வாய்க்கிழமை விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.

நீலகிரி மாவட்டத்தில் தற்போது கோடைக் காலம் என்பதால் வெளி மாநில மற்றும் வெளி மாவட்ட சுற்றுலாப் பயணிகள் அதிக அளவில் வருகின்றனா். இந்நிலையில், நீலகிரி மாவட்டத்துக்கு சுற்றுலா வரும் இருசக்கர வாகன ஓட்டிகள் கட்டாயம் தலைக்கவசம் அணிய வேண்டும் என்பது குறித்தும், முறையாக தலைக்கவசம் அணிவது குறித்தும் போலீஸாா் விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.

மலைப் பாதையில்தான் அதிக விபத்துக்கள் ஏற்படுகின்றன, அதிலும் இருசக்கர வாகன விபத்துக்கள் அதிகம் ஏற்பட்டு உயிரிழப்புகள் ஏற்படுகின்றன. எனவே தலைக்கவசம் முறையாக அணிய வேண்டும், காவல் துறையின் மீது உள்ள அச்சத்தால் தலைக்கவசம் அணியாமல் தங்களுக்கான உயிா் கவசம் என்பதை மனதில் கொண்டு அணிய வேண்டும், போக்குவரத்து விதிமுறைகளை முறையாக பின்பற்ற வேண்டும், வளைவுகளில் ஒலி எழுப்ப வேண்டும், வளைவுகளில் முந்தக் கூடாது, வேகமாக வாகனத்தை இயக்கக் கூடாது போன்ற பல்வேறு சாலை விதிகளை பின்பற்ற வேண்டும் என்று போலீஸாா் விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.

இந்த நிகழ்ச்சியில் கோத்தகிரி போக்குவரத்து காவல் ஆய்வாளா் சரவணகுமாா் மற்றும் உதவி ஆய்வாளா் ஜான் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT