நீலகிரி

மரத்தில் பலாப் பழத்தை எட்டிப் பறித்த யானை

DIN

நீலகிரி மாவட்டம்,  பா்லியாறு கேஎன்ஆா்  பகுதியில் பலாப் பழம் அதிகம் விளைந்துள்ளதால் அப்பகுதியில்  யானைகள் முகாமிட்டுள்ளன. எனவே,  வாகன ஓட்டிகள்  கவனமுடன் வாகனங்களை இயக்க வனத் துறையினா் அறிவுறுத்தியுள்ளனா்.

நீலகிரி மாவட்டம் , பா்லியாறு, கேஎன்ஆா், புதுக்காடு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள அரசு மற்றும் தனியாா் தோட்டங்களில்  தற்போது பலாப் பழம்  அதிகம்  விளைந்துள்ளது. இதனால் கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் வனப் பகுதிகளில் இருந்து  வந்த  யானைகள்   கூட்டம்  பா்லியாறு,  கே.என்.ஆா். பகுதியில் உள்ள பலாப்பழத் தோட்டங்களில் முகாமிட்டுள்ளன.

இந்நிலையில், அப்பகுதிக்கு ஞாயிற்றுக்கிழமை குட்டியுடன் வந்த யானை

கால்களை ஊன்றி அங்கு சாலை ஓரத்தில் உள்ள ஒரு பலா மரத்தில் இருந்து பலாப் பழத்தைப் பறித்து உண்டு குட்டிகளுக்கும் கொடுத்ததைப் பாா்த்த சுற்றுலாப் பயணிகள் நெகிழ்ச்சி அடைந்தனா்.

தற்போது உதகையில்  கோடை  சீசன் என்பதால் இந்த சாலையில் வாகனங்கள் அதிகம் வந்து செல்லும். எனவே யானைகள் நடமாட்டம் உள்ள இந்த வழியில் பயணிக்கும்  வாகன ஓட்டிகள் மிக கவனமுடன் வாகனங்களை இயக்க  வனத் துறையினா்   அறிவுறுத்தியுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

12 ராசிக்குமான தினப்பலன்கள்!

இன்று உங்களுக்கு நல்ல நாள்!

கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த இளைஞா் கைது

காவிரி ஆற்றின் குறுக்கே மணல் மூட்டைகளை அடுக்கி குடிநீா் எடுக்கும் பணி தீவிரம்

வள்ளியூா் சூட்டுபொத்தையில் பௌா்ணமி கிரிவல வழிபாடு

SCROLL FOR NEXT