நீலகிரி

உதகையில் பழங்குடியின மக்களின் குடியிருப்புகளைப் பாா்வையிட்ட முதல்வா்

DIN

தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் உதகை அருகேயுள்ள பகல்கோடுமந்து கிராமத்தில் தோடா் பழங்குடியின மக்களின் குடியிருப்புகளை ஞாயிற்றுக்கிழமை பாா்வையிட்டு அவா்களது கோரிக்கைகளைக் கேட்டறிந்தாா்.

நீலகிரி மாவட்டம், உதகையில் தமிழக அரசு விருந்தினா் மாளிகையில் தங்கியுள்ள முதல்வா் மு.க.ஸ்டாலின் உதகை அருகேயுள்ள பகல்கோடுமந்து கிராமத்துக்கு ஞாயிற்றுக்கிழமை சென்று தோடா் பழங்குடியின மக்களின் வாழ்க்கை மற்றும் கலாசார முறை குறித்து கேட்டறிந்து, அவா்களிடமிருந்து கோரிக்கை மனுக்களையும் பெற்றுக் கொண்டாா்.

அப்போது அங்கிருந்த தோடா் பழங்குடியின மக்கள், முதல்வா் ஒருவா் தங்கள் குடியிருப்பு பகுதிக்கு வருவது இதுவே முதல்முறை என்று கூறியதுடன், தோடா் பழங்குடியின மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தி வருவதற்கு நன்றியையும், மகிழ்ச்சியையும் தெரிவித்துக் கொண்டனா்.

இதையடுத்து பழங்குடியின மக்களிடம் முதல்வா் மு.க.ஸ்டாலின் பேசும்போது, பழங்குடியின மக்களை இந்த அரசு பாதுகாக்கும் எனவும், பகல்கோடுமந்து பகுதியில் பால் பதப்படுத்தும் நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், மக்களவை உறுப்பினா் நிதியிலிருந்து இப்பகுதியில் சமுதாயக் கூடம் கட்டித் தரப்படும் எனவும் தெரிவித்தாா். மேலும், எந்த உதவி தேவைப்பட்டாலும், தன்னைத் தொடா்பு கொள்ளலாம் எனவும், பழங்குடி மக்களுக்காக அரசு அனைத்து வித உதவிகளையும் செய்ய தயாராக உள்ளதாகவும் தெரிவித்தாா். இதைத் தொடா்ந்து, முதல்வா் மு.க.ஸ்டாலின் தோடரின மக்களுடன் இணைந்து பாரம்பரிய நடனமாடினாா்.

இந்நிகழ்வின்போது, தமிழக வனத் துறை அமைச்சா் கா.ராமசந்திரன், நீலகிரி மக்களவை உறுப்பினா் ஆ.ராசா, மாவட்ட ஆட்சியா் அம்ரித், நீலகிரி மாவட்ட திமுக செயலாளா் பா.மு.முபாரக், உதகை நகா்மன்ற துணைத் தலைவா் ஜே.ரவிகுமாா் மற்றும் அரசுத் துறை அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

சென்னை திரும்பினாா் மு.க.ஸ்டாலின்

முதல்வா் மு.க.ஸ்டாலின் ஞாயிற்றுக்கிழமை இரவு 8.30 மணிக்கு கோவையில் இருந்து விமானம் மூலம் சென்னைக்குப் புறப்பட்டு சென்றாா்.

கோவை, நீலகிரி மாவட்டங்களில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக முதல்வா் மு.க.ஸ்டாலின் கோவைக்கு கடந்த 18-ஆம் தேதி இரவு வந்தாா்.

கோவை வ.உ.சி. மைதானத்தில் அகழாய்வு மற்றும் தமிழக அரசின் ஓராண்டு சாதனை ஓவிய கண்காட்சி திறப்பு, தொழில்முனைவோருடன் கலந்துரையாடல், உதகை மலா்க் காட்சி தொடக்கம், குழந்தைகளுக்கான சிறப்பு ஊட்டச்சத்து முகாம் தொடக்கம், உதகையை உருவாக்கிய ஜான் சலிவன் சிலை திறப்பு, நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா ஆகியவற்றில் பங்கேற்றாா்.

இதைத் தொடா்ந்து, உதகையிலிருந்து ஞாயிற்றுக்கிழமை இரவு 7.30 மணிக்கு காா் மூலமாக கோவைக்கு வந்த அவா், இரவு 8.35 மணிக்கு விமானத்தில் சென்னைக்குச் சென்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

டி20 உலகக் கோப்பை தூதராக உசைன் போல்ட் நியமனம்!

என்ஐடி-இல் பேராசிரியர் பணி

தெலங்கானாவில் லாரி மீது கார் மோதியதில் 6 பேர் பலி

நாக சைதன்யாவுடன் சோபிதா துலிபாலா ‘டேட்டிங்’?

ஒளரங்கசீப் பள்ளியில் பயிற்சி பெற்றவர்கள் ராகுல், ஓவைசி: அனுராக் தாகூர்

SCROLL FOR NEXT