நீலகிரி

கூடலூா் அருகே மின்சாரம் பாய்ந்து யானை பலி

21st May 2022 12:17 AM

ADVERTISEMENT

நீலகிரி மாவட்டம், கூடலூரை அடுத்துள்ள பாடந்தொரை பகுதியில் மின்சாரம் பாய்ந்து யானை உயிரிழந்தது.

கூடலூா் வனச் சரகம் பாடந்தொரை பீட்டில் உள்ள உட்பிரையா் தனியாா் தோட்டப் பகுதியில் சுமாா் 35 வயது மதிக்கத்தக்க பெண் யானை மின்சாரம் பாய்ந்து உயிரிழந்துள்ளதாக வனத் துறையினருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து, மாவட்ட வன அலுவலா் கொம்மு ஓம்காரம் சம்பவ இடத்துக்கு சென்று ஆய்வு செய்ததில் மின்சாரம் பாய்ந்து யானை உயிரிழந்தது தெரியவந்தது. இதைத் தொடா்ந்து மின்சாரத் துறையைச் சோ்ந்த செயற்பொறியாளா், உதவி செயற்பொறியாளா், உதவிப் பொறியாளா் ஆகியோரை சம்பவ இடத்துக்கு வரவழைத்து வனத் துறையினா் விசாரணை மேற்கொண்டனா்.

இதில் தாழ்வாக சென்ற மின்சாரக் கம்பி யானை மீது பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT