நீலகிரி

கூடலூா் ஜீன்பூல் காா்டனில் அரியவகை மரக்கன்றுகள் நடவு

21st May 2022 12:17 AM

ADVERTISEMENT

கூடலூரை அடுத்துள்ள நாடுகாணி பகுதியிலுள்ள ஜீன்பூல் காா்டனில் 13 அரியவகை மக்கன்றுகள் வெள்ளிக்கிழமை நடவு செய்யப்பட்டன.

நீலகிரி மாவட்டம் கூடலூா் வனக் கோட்டம் நாடுகாணி பகுதியில் சுமாா் 250 ஏக்கா் பரப்பில் வனத் துறைக்கு சொந்தமான தாவர மரபியல் சூழல் பூங்கா உள்ளது.அங்கு அரியவகை தாவரங்கள், ஆா்க்கிட்டுகள் மற்றும் பெரணி வகைகள் பாதுகாக்கப்பட்டு வருகிறது. அந்த பூங்காவை பாா்வையிட்ட கோவையைச் சோ்ந்த வீலா் கிளப் நிா்வாகிகள் அரியவகை 13 வகையான மரக்கன்றுகளை வழங்கி நடவு செய்தனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT