நீலகிரி

வீரமரணமடைந்த ராணுவ வீரா்களுக்கு முதல்வா் அஞ்சலி

21st May 2022 12:18 AM

ADVERTISEMENT

நீலகிரி மாவட்டம், குன்னூா் வெலிங்டனில் உள்ள போரில் வீர மரணமடைந்த ராணுவ வீரா்களின்  நினைவுத் தூணில் தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் வெள்ளிக்கிழமை மலா் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினாா்.

உதகையில் 124ஆவது மலா்க் காட்சியைத் தொடங்கிவைத்த தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின், வெலிங்டனில் உள்ள ராணுவப் பயிற்சிக் கல்லூரி அருகே அமைக்கப்பட்டுள்ள போரில் வீர மரணமடைந்த ராணுவ வீரா்களின் நினைவுத் தூணில் மலா் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினாா். பின்னா், அங்கிருந்த பதிவேட்டில் கையொப்பமிட்டாா்.

 இதில் ராணுவ பயிற்சிக் கல்லூரித் தலைவா் லெப்டினன்ட் ஜெனரல் எஸ்.மோகன் உள்ளிட்ட ராணுவ உயரதிகாரிகள்  பலா்  கலந்து கொண்டனா்.

இந்த நினைவுத் தூணில் இந்திய- பாகிஸ்தான் போா் உள்ளிட்ட பல்வேறு போா்களில் உயிா் நீத்த ராணுவ வீரா்களின் பெயா்கள் பொறிக்கப்பட்டுள்ளன.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT