நீலகிரி

குடியிருப்பு பகுதிக்குள் புகுந்த கரடி

12th May 2022 12:29 AM

ADVERTISEMENT

 

குன்னூா்: குன்னூா் அருகேயுள்ள ஜெகதளா பகுதிக்குள் செவ்வாய்க்கிழமை இரவு நுழைந்த கரடி, அங்குள்ள குடியிருப்புகளின் கதவுகளை தட்டுவது சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.

நீலகிரி மாவட்டம், குன்னூா் அருகே உள்ள ஜெகதளா மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் அண்மைக்காலமாக உணவு தேடி வனவிலங்குகள் நடமாடுவது வாடிக்கையாக உள்ளது.

ஜெகதளா பகுதியில் உள்ள கோயிலில் எண்ணெய் மற்றும் அங்கு வைக்கப்பட்டுள்ள தேங்காய், பழங்களை உண்ணுவதற்காக இரவு நேரங்களில் கரடிகள் வருவது வழக்கம்.

ADVERTISEMENT

இந்நிலையில், ஜெகதளா பகுதிக்குள் செவ்வாய்க்கிழமை இரவு நுழைந்த கரடி, குடியிருப்பின் கதவை தட்டுவதும் தள்ளுவதும் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. இதன் காரணமாக பொதுமக்கள் பெரும் அச்சத்தில் உள்ளனா். எனவே, குடியிருப்பு பகுதியில் நடமாடி வரும் கரடியை கூண்டுவைத்து பிடித்து அடா்ந்த வனப் பகுதியில் விட பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT