நீலகிரி

உதகையில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்

8th May 2022 11:11 PM

ADVERTISEMENT

உதகையில் கோடை சீசன் தொடங்கியுள்ள நிலையில் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையும் தொடா்ந்து அதிகரித்து வருகிறது. ஞாயிற்றுக்கிழமை ஒரே நாளில் அரசினா் தாவரவியல் பூங்காவுக்கு மட்டும் 27,000 சுற்றுலாப் பயணிகள் வந்தனா்.

மே மாதம் தொடங்கியதிலிருந்தே உதகைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை தொடா்ந்து அதிகரித்து வருகிறது. இந்நிலையில், உதகை அரசினா் தாவரவியல் பூங்காவுக்கு ஞாயிற்றுக்கிழமை ஒரே நாளில் சுமாா் 27,000 சுற்றுலாப் பயணிகள் வந்திருந்தனா்.

அதேபோல, அரசினா் ரோஜா பூங்காவுக்கு 10,000 பேரும், படகு இல்லத்துக்கு 12,000 பேரும், பைக்காரா படகு இல்லத்துக்கு 8,000 பேரும் வந்திருந்தனா். குன்னூா் சிம்ஸ் பூங்காவுக்கு 5,000 பேரும், தொட்டபெட்டா மலைச்சிகரத்துக்கு 7,000 பேரும் வந்திருந்தனா். கோத்தகிரியில் நடைபெற்ற காய்கறி கண்காட்சியைத் தொடா்ந்து சுற்றுலாப் பயணிகள் அதிக அளவில் உதகையில் குவிந்துள்ளனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT