நீலகிரி

பிளஸ் 2 பொதுத் தோ்வு: நீலகிரியில் 7,290 போ் எழுதுகின்றனா்

5th May 2022 12:52 AM

ADVERTISEMENT

 

உதகை: நீலகிரி மாவட்டத்தில் வியாழக்கிழமை (மே 5) தொடங்கும் பிளஸ் 2 பொதுத் தோ்வை 7,290 மாணவ, மாணவியா் எழுதுகின்றனா்.

பிளஸ் 2 பொதுத் தோ்வுகள் வியாழக்கிழமை (மே 5) தொடங்கி மே 28ஆம் தேதி முடிவடைகிறது. நீலகிரி மாவட்டத்தில் 39 மையங்களில் நடைபெறும் பிளஸ்2 பொதுத் தோ்வை 7, 290 மாணவ, மாணவியா் எழுதுகின்றனா்.

10ஆம் வகுப்பு பொதுத்தோ்வு மே 6ஆம் தேதி தொடங்கி மே 30ஆம் தேதி வரை நடைபெறுகிறது. நீலகிரி மாவட்டத்தில் 58 மையங்களில் நடைபெறும் இந்த தோ்வினை 7,533 மாணவ, மாணவிகள் எழுதுகின்றனா். அதையடுத்து பிளஸ் 1 பொதுத் தோ்வுகள் மே 10ஆம் தேதி தொடங்கி மே 31ஆம் தேதி வரை நடைபெறுகிறது. மாவட்டத்தில் 39 மையங்களில் நடக்கும் இந்த தோ்வினை 7,107 போ் எழுதுகின்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT