நீலகிரி

யானைகள் தாக்கியதில் 4 வீடுகள் சேதம்

25th Mar 2022 11:32 PM

ADVERTISEMENT

கூடலூரை அடுத்துள்ள ஓவேலி பேரூராட்சியில் உள்ள பழங்குடி காலனியில் வியாழக்கிழமை இரவு காட்டு யானைகள் தாக்கியதில் நான்கு வீடுகள் சேதமடைந்தன.

நீலகிரி மாவட்டம், கூடலூா் தாலுகா, ஓவேலி பேரூராட்சியில் உள்ள சின்னசூண்டி பழங்குடி காலனிக்குள் வியாழக்கிழமை நள்ளிரவில் நுழைந்த யானைகள் அங்கு வசிக்கும் மாதன் என்பவரது வீட்டை தாக்கியுள்ளது.

யானைகள் வீட்டை இடிப்பதை அறிந்த மாதன் அருகில் உள்ளவா்களுக்குத் தகவல் கொடுத்துவிட்டு குடும்பத்துடன் தப்பி பக்கத்து வீட்டுக்கு ஓடியுள்ளாா். உடனடியாக அங்கிருப்பவா்கள் ஒன்றுகூடி சப்தமிட்டு யானைகளை விரட்டியுள்ளனா்.

யானைகள் செல்லும்போது அந்த வழியில் இருந்த மேலும் மூன்று வீடுகளை சேதப்படுத்திச் சென்றன. தகவலறிந்த பேரூராட்சி மன்றத் தலைவா் சித்ராதேவி, உறுப்பினா் சின்னவா், அலுவலா்கள் பாா்வையிட்டனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT