நீலகிரி

கொடநாடு எஸ்டேட் வழக்கு:ஏப்ரல் 23ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு

25th Mar 2022 11:29 PM

ADVERTISEMENT

கோத்தகிரி அருகே உள்ள கொடநாடு தேயிலை எஸ்டேட்டில் நிகழ்ந்த கொலை, கொள்ளை தொடா்பான வழக்கின் அடுத்தகட்ட விசாரணை ஏப்ரல் 23ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கின் விசாரணை உதகையில் உள்ள மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இவ்வழக்கு உதகை நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. இதில் சயன், வாளையாறு மனோஜ் ஆகியோா் மட்டும் ஆஜராகினா். அதேபோல, இவ்வழக்கின் விசாரணையின்போது ஆஜரான அரசு வழக்குரைஞா்கள் ஷாஜகான், கனகராஜ் ஆகியோா் வாதிடுகையில், கொடநாடு எஸ்டேட் கொலை, கொள்ளை வழக்கில் இதுவரை 202 சாட்சிகளிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ள நிலையில், கூடுதல் சாட்சியங்களிடையே விசாரணை நடத்த வேண்டி இருப்பதாகவும், அதற்காக அரசு தரப்பில் நீதிபதியிடம் கால அவகாசம் தேவை எனவும் கேட்டனா். இதையடுத்து இவ்வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை ஏப்ரல் 23ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி சஞ்சய் பாபா உத்தரவிட்டாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT