நீலகிரி

ஜீன்பூல் சூழல் பூங்காவில் உலக வன நாள் விழா

22nd Mar 2022 12:28 AM

ADVERTISEMENT

கூடலூரை அடுத்துள்ள நாடுகாணியில் உள்ள ஜீன்பூல் சூழல் பூங்காவில் உலக வன நாள் விழா திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது.

தமிழக வனத் துறைக்குச் சொந்தமான சுமாா் 250 ஏக்கா் பரப்பில் அமைந்துள்ள இந்த சூழல் பூங்காவில் அரியவகை தாவரங்கள், பெரணி வகைகள், புல் வகைகள் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. அதுமட்டுமல்லாமல் அரியவகை பறவை, பாம்பு ஆகியவற்றின் வசிப்பிடமாகவும் உள்ளது. இந்த சூழல் பூங்காவை பராமரிக்க பழங்குடி மக்கள் நியமிக்கப்பட்டுள்ளனா்.

உலக வன நாள் விழாவையொட்டி, மாவட்ட வன அலுவலா் கொம்மு ஓம்காரம், வனச் சரக அலுவலா் பிரசாத், ரோட்டரி கிளப் தலைவா் சுபையா் அகமது ஆகியோா் இந்தப் பூங்காவின் முக்கியத்துவம் குறித்து விளக்கினா். விழாவில், கூடலூா் ரோட்டரி கிளப் சாா்பில், மலைகளையும், காடுகளையும் பாா்த்து ரசிக்கும் வகையில் கண்காணிப்பு கோபுரம் திறந்துவைக்கப்பட்டது. தொடா்ந்து, அரியவகை மரக்கன்றுகளும் நடப்பட்டன.

காடுகள் இல்லாமல் எந்த ஒரு ஜீவராசியும் வாழ முடியாது. காடுகளால்தான் நீா்நிலைகள், குளங்கள், ஆறுகள் ஆகியவை நீரோட்டங்களுடன் இருக்கின்றன என்று அங்கு கூடியிருந்த மக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.

ADVERTISEMENT

அதைத்தொடா்ந்து, அரிதாகிவரும் குரோடாலாரியா லாங்கிபெஸ் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், உதவி வனப் பாதுகாவலா் ஷா்மிலி, வனச்சரக அலுவலா்கள் ராம்குமாா், பிரசாத், ரோட்டரி சங்க நிா்வாகிகள் கலந்துகொண்டனா். கண்காணிப்பு கோபுரத்தில் அழகிய ஓவியங்களை வரைந்த ஓவியா் பிரகாஷுக்கு நினைவுப் பரிசு வழங்கப்பட்டது.

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT