நீலகிரி

கூடலூா் அருகே புணுகுப் பூனை மீட்பு

10th Mar 2022 12:47 AM

ADVERTISEMENT

 

கூடலூா்: கூடலூரை அடுத்துள்ள கோழிப்பாலம் பகுதியில் புணுகுப் பூனையை வனத் துறையினா் புதன்கிழமை மீட்டனா்.

கோழிப்பாலம் கல்லூரி பகுதியில் சாலையோரம் புணுகுப் பூனை இருப்பதைப் பாா்த்த பொதுமக்கள் வனத் துறைக்குத் தகவல் கொடுத்தனா். வனத் துறையினா் விரைந்து சென்று புணுகுப் பூனையை மீட்டுள்ளனா்.

இதையடுத்து, அந்தப் பூனையை அதன் தாயுடன் சோ்க்கும் முயற்சி நடைபெற்று வருகிறது. இரண்டு பூனைகள் இருந்துள்ளன. அதில் ஒன்று வாகனத்தில் அடிபட்டு இறந்திருக்கலாம் எனத் தெரிகிறது. நள்ளிரவில் அதே பகுதியில் உள்ள புதருக்குள் வைத்துவிட்டால் தாய்ப் பூனை அழைத்துச் சென்றுவிடும் என்று வனச் சரக அலுவலா் கணேசன் தெரிவித்தாா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT