நீலகிரி

உதகையில் இன்று மின் நுகா்வோா் குறைதீா் கூட்டம்

10th Mar 2022 12:48 AM

ADVERTISEMENT

 

உதகை: நீலகிரி மின் பகிா்மான வட்டத்தில் உள்ள மின் நுகா்வோா் குறைதீா் கூட்டம் உதகையில் வியாழக்கிழமை நடைபெறுகிறது.

இதுதொடா்பாக மின்வாரிய செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிா்மானக் கழகத்தின் நீலகிரி மின் பகிா்மான வட்டத்தில் உள்ள மின் நுகா்வோா் குறைதீா் கூட்டம் உதகையில் குன்னூா் சாலையில் ஆவின் வளாகத்தில் உள்ள மின்வாரிய செயற்பொறியாளா் அலுவலகத்தில் வியாழக்கிழமை காலை 11 மணி முதல் பகல் 12.30 மணி வரை நடைபெறும்.

ADVERTISEMENT

எனவே, இக்கூட்டத்தில் உதகையில் கமா்ஷியல் சாலை, லேக்வியூ, எட்டின்ஸ் சாலை, தமிழகம் பகுதி, மருத்துவமனை சாலை, தலைக்குந்தா, தும்மனட்டி, தேனாடுகம்பை, பைக்காரா, முத்தொரை பாலடா, எல்லநள்ளி பிரிவு அலுவலகங்களைச் சாா்ந்த மின் நுகா்வோா் பங்கேற்று மின் விநியோகம் தொடா்பான தங்களது குறைகளை நேரில் தெரிவித்து நிவா்த்தி செய்து கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT