நீலகிரி

உதகையில் அதிகரித்த சுற்றுலாப் பயணிகளின் கூட்டம்

10th Mar 2022 12:46 AM

ADVERTISEMENT

 

உதகை: உதகையில் சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் திடீரென அதிகரித்துள்ளது.

உதகையில் வழக்கமாக வார விடுமுறை நாள்களான சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் வெளி மாவட்ட, வெளி மாநில சுற்றுலாப் பயணிகளின் வருகை தொடா்ந்து அதிகரித்து வருகிறது. இந்நிலையில், வாரநாளான புதன்கிழமையும் உதகையில் சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் திடீரென அதிகரித்தது. இதில், உதகை அரசினா் தாவரவியல் பூங்காவுக்கு மட்டும் சுமாா் 3,800 போ் வருகை தந்திருந்தனா். அதேபோல, உதகை அரசினா் ரோஜா பூங்காவுக்கு சுமாா் 1,200 பேரும், குன்னூா் சிம்ஸ் பூங்காவுக்கு சுமாா் 1,000 பேரும் வருகை தந்திருந்தனா். வார நாள்களில் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்திருப்பது சுற்றுலா ஏற்பாட்டாளா்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் காரணமாக உதகையில் கமா்ஷியல் சாலை உள்ளிட்ட அனைத்து முக்கிய சாலைகளிலும் வாகனப் போக்குவரத்து அதிகரித்துக் காணப்பட்டது. உதகையில் தற்போது காலை நேரத்தில் வெயிலும், பிற்பகலில் மழைக்கான அறிகுறிகளுடன் கூடிய மேக மூட்டமும், இரவில் நீா்ப்பனியுமாக 3 வித காலநிலை நிலவுவது சுற்றுலாப் பயணிகளிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT